Saturday, June 6, 2020

கொரோனாவில் இத்தாலியை பின்னுக்கு தள்ளியது இந்தியா..!!!! அச்சத்தில் மக்கள்..!!

இந்தியாவில் இதுவரை இரண்டு லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் இருக்கும் நிலையில் உலக அளவில் இதுவரை ஏழாவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த இத்தாலியை முந்தியுள்ளது என்பது அதிர்ச்சிக்குரிய தகவல் ஆகும்.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும் இரண்டாவது இடத்தில் ரஷ்யாவும் மூன்றாவது இடத்தில் பிரேசிலும் 4வது இடத்தில் ஸ்பெயினும், ஐந்தாவது இடத்தில் இங்கிலாந்தும் இருந்து வரும் நிலையில் இந்தியாவில் கொரனோ பாதிப்பு மிக அதிகமாக உள்ளதால் ஆறாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் குறிப்பாக மகாராஷ்டிர மாநிலம் தான் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளது இங்கு 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிராவை அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகமும் மூன்றாவது இடத்தில் டெல்லியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் இந்தியாவில் ஆறாவது இடத்தை பிடித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Post Navi 
Share This

0 Comments: