Monday, June 1, 2020

நயந்தாராவை பார்த்து வியந்த பாலிவுட் நடிகை...!!!

லேடி சூப்பர் ஸ்டார் என அனைவரும் வியந்து கூறும் அளவுக்கு வளர்ந்து இருக்கிறார் நயன்தாரா. டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பது மட்டுமின்றி சோலோவாக பல படங்களில் நடித்து வருகிறார். முன்னணி நடிகர்களுக்கு இணையாக நயன்தாரா நடிக்கும் படங்களும் நல்ல வசூல் ஈட்டுகின்றன. 

இவ்வளவு உயரத்தை தொட்டுள்ள நயன்தாரா பற்றி பாலிவுட் நடிகை கத்ரினா கைப் வியப்புடன் பேசி உள்ளார். சென்ற வருடம் Kay Beauty என்ற தனது அழகு சாதன பொருட்களின் பிராண்ட் ஒற்றை வெளியிட்டார் கத்ரினா கைப். 

கே பியூட்டி விளம்பரத்தில் நடிக்க சென்ற வருடம் நயன்தாரா மும்பை சென்று இருந்தார். அப்போதே நயன்தாரா உடன் கத்ரினா கைப் இருக்கும் புகைப்படங்களும் வெளிவந்து இருந்தது. நயன்தாராவுக்கு நன்றி கூறும் விதத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட கத்ரினா "அழகான தென்னிந்திய சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு பெரிய நன்றி. அவரது பிஸியான schedule நடுவில் மும்பைக்கு வந்து கே பியூட்டி விளம்பரத்தில் நடித்ததற்கு நன்றி. தாராள எண்ணத்துடனும், கருணையுடனும் இருப்பவர் அவர். எப்போதும் நன்றி மறக்கமாட்டேன்" என கூறி இருந்தார். 

அதனை தொடர்ந்து தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் கத்ரீனா கைப் நயன்தாரா பற்றி வியப்புடன் பேசி உள்ளார். 

"நயன்தாரா அழகானவர் மட்டுமின்றி வலிமையானவரும் கூட என்பதை நான் பார்த்தேன். அவர் ஒரு போராளியாக வளர்ந்திருக்கிறார். மற்றும் அவரிடம் எதோ ஒன்று உள்ளது.. அவர் பணியாற்றும் வித்த்தில். சிறு வயதில் இருந்தே பணியாற்றி வருகிறார், அதனால் கவனத்துடன் இருக்கறார். என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரிகிறது. அதில் அவர் உறுதியாகவும் இருக்கிறார்." 

"அது என்னை பிரதிபலிப்பது போலவே இருந்தது. அதனால் நயந்தாரா செட்டில் இருக்கும்போது நான் எப்போதும் என்னுடைய டீமிடம் நான் என்ன சொல்வேன் என்றால்.. 'என்னையே கண்ணாடியில் பார்ப்பது போல இருக்கிறது' என நயன்தாரா பற்றி சொல்வேன்" என கத்ரீனா தெரிவித்துள்ளார். 

நயன்தாரா பற்றி முன்னணி பாலிவுட் நடிகை இப்படி கூறி இருப்பது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

A post shared by Devi Media (@acmaa_dharun) on

நயன்தாரா கொரோனா லாக்டவுனுக்கு முன்பு ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார். அவர்கள் அதற்கு முன்பு ஜோடியாக நடித்த தர்பார் படம் ஜனவரியில் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆனது. அப்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. 

அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் கொரோனா பிரச்சனை காரணமாக உள்ளதால் அந்த படம் 2021 பொங்கலுக்கு தான் ரிலீஸ் என அதிகாரபூர்வமாக சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது. 

அது மட்டுமின்றி அம்மன் வேடத்தில் நயந்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படமும் ரிலீஸுக்கு தயராக உள்ளது. ஆர்.ஜே.பாலாஜி அந்த படத்தினை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண் என்ற படத்திலும் நடித்து உள்ளார் நயன்தாரா. அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் நயன்தாரா. அதில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். சமந்தாவும் அதில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

Post Navi 
Share This

0 Comments: