Monday, June 22, 2020

ஆன்லைனில் மதுபானம், ஹோம் டெலிவரி..?? - அமேசன்


ஆன்லைன் வர்த்தகத்துறையில் முன்னணி நிறுவனமான அமேசான், இந்தியாவில் மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்வதற்கான அனுமதியை பெற்றுள்ளது. முன்னதாக ஸ்விக்கி மற்றும் ஜொமாட்டோ நிறுவனங்கள் மதுபான டெலிவரி செய்ய துவங்கிய நிலையில், தற்போது அமேசான் நிறுவனமும் மதுபானங்களை விரைவில் ஹோம் டெலிவரி செய்ய இருக்கிறது.

இதில் முதற்கட்டமாக மேற்கு வங்க மாநிலத்தில் மதுபானங்களை வாடிக்கையாளர்கள் வீட்டிற்கே கொண்டு சேர்க்கும் பணிகளை அமேசான் துவங்க உள்ளது. இதற்காக அமேசான் நிறுவனம் மேற்கு வங்க மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருக்கிறது.

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது நாடான இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் மோகம் தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.


Post Navi 
Share This

0 Comments: