வாஸ்து முறைப்படி குழந்தைகளின் அறையில் என்னவெல்லாம் இருக்கலாம்!!

- Advertisement -spot_img

வாஸ்து முறைப்படி குழந்தைகளின் அறையில் என்னவெல்லாம் இருக்கலாம்!!

இவ்வுலகிலேயே மிகவும் அழகான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வு என்றால், அது ஓர் உயிரை இவ்வுலகிற்கு கொண்டு வருவது தான். தம்பதியராக இருக்கும் அனைவருக்குமே, அவர்களது வாழ்வின் மிகச் சிறந்த தருணமாக, அவர்களது குழந்தை பிறந்த நிகழ்வை தான் கூறுவார்கள். இன்றைய காலக்கட்டத்தில், திருமணமான தம்பதிகள் குழந்தை பேற்றை பற்றி நிறைய திட்டமிட்ட பின்னர் தான் தயாராகின்றனர். குழந்தை பிறப்பதற்கு முன்பே, அதன் ஆரோக்கியம், மகிழ்ச்சி, கல்வி மற்றும் எதிர்காலம் குறித்த பெரிய கனவு மற்றும் திட்டத்தை அனைத்து பெற்றோருமே வகுத்து வைத்திருப்பர்.

குழந்தை பிறந்த தேதியிலிருந்து, முதல் சில ஆண்டுகள் என்பது மிகவும் முக்கியமானது என்பது அனைவருமே அறிந்த ஒன்று தான். ஏனென்றால், அந்த காலத்தில் தான் குழந்தைக்கு மன மற்றும் உடல் சார்ந்த வளர்ச்சி மற்றும் வாழ்வின் அடித்தளம் என அனைத்துமே சிறந்ததாக உருவாக்கிட நம்மால் உதவிட முடியும். குழந்தை மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து அத்தியாவசிய முறைகளையும், சரியாக பின்பற்ற வேண்டியது அவசியம். அது தவிர, ஒரு குழந்தை வளர உதவுவதில் நேர்மறை ஆற்றல் நிறைந்த சூழலை உருவாக்க பெற்றோர்கள் வாஸ்து சாஸ்திரத்தின், நமது பழங்கால இந்திய அறிவியலின் உதவியையும் பெறலாம். புதிதாகப் பிறந்த குழந்தைக்கான அறையை வடிவமைக்கும்போது ஒவ்வொரு பெற்றோரும் மனதில் கொள்ளக்கூடிய சில வாஸ்து உதவிக்குறிப்புகளை பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம்…

children's room according to the Vastu system
children’s room according to the Vastu system

சூரிய வெளிச்சம் முக்கியம்

குழந்தைக்காக நீங்கள் ஒதுக்கும் அறையின் மிக முக்கியமான அம்சமாக, சூரிய வெளிச்சம் அமைகிறது. குழந்தையின் அறையில் போதுமான அளவு சூரிய ஒளி நிச்சயமாக கிடைக்க வேண்டும். குறிப்பாக அதிகாலை சூரிய கதிர்கள் வருவது சிறந்தது. நிறைய நேர்மறை ஆற்றலை குழந்தையின் அறைக்கு வரவழைப்பதை காட்டிலும், அதிகாலை சூரிய கதிர்கள் குழந்தையின் அறையில் படும்போது, அங்குள்ள பெரும்பாலான கிருமிகளை அது கொல்லும்.

குழந்தையின் படுக்கை

குழந்தை தூங்க ஏற்பாடு செய்பவர்கள், கண்டிப்பாக படுக்கையை வடகிழக்கு திசையில் இருக்குமாறு அமைக்க வேண்டும். ஒரு குழந்தையின் படுக்கையறைக்கு வடக்கு, வடகிழக்கு மற்றும் கிழக்கு பகுதிகளே சிறந்தவை.

தொட்டில்

 குழந்தைக்காக நீங்கள் அமைக்கும் தொட்டிலானது, சுவரிலிருந்து 2 முதல் 3 அடி தூரத்தில் இருக்க வேண்டும். அது சரியாக அறையின் தென்மேற்கில் மூளையில் அமைக்கப்பட வேண்டும். மேலும், தூங்க வைக்கும் போது குழந்தையின் தலை தெற்கு அல்லது மேற்கு திசையை நோக்கி இருக்க வேண்டியது அவசியம்.

children's room according to the Vastu system
children’s room according to the Vastu system

அமைதியான தூக்கம் முக்கியம்

தூங்கும் போது குழந்தையின் தலை தெற்கு அல்லது மேற்கு திசையை நோக்கி இருக்க வேண்டும். இப்படி தூங்க வைப்பதன் மூலம் குழந்தை நிம்மதியான மற்றும் அமைதியான தூக்கத்தை பெற்றிடும்.

சமநிலையை பராமரிக்கவும் வீட்டின் வடமேற்கு பகுதியானது, சரியான காற்று சமநிலையுடன் தொடர்புடையது. இந்த பகுதியில் குழந்தை இருக்கும் போது, குழந்தைக்கு எவ்வித சுவாச பிரச்சனைகளும் ஏற்படாமல் தடுத்திட உதவும்.

மேஜிக் செய்யும் கல் உப்பு

குழந்தையின் அறையில் ஒரு சிறு கிண்ணத்தில் உப்பு வைக்க வேண்டும். உப்பிற்கு எதிர்மறை ஆற்றல்களை உறிஞ்சும் தன்மையுண்டு. எனவே, குழந்தை அறையில் உப்பு வைப்பதனால், அங்குள்ள எதிர்மறை ஆற்றல்கள் உப்பால் உறிஞ்சப்பட்டு விடும். இருப்பினும், அப்படி வைக்கப்படும் உப்பை அடிக்கடி மாற்ற வேண்டியதும் அவசியம்.

children's room according to the Vastu system
children’s room according to the Vastu system

வண்ணங்களில் கவனம் செலுத்துங்கள்

அடர்ந்த மற்றும் கனமான வண்ணங்கள் தவிர்க்கப்பட வேண்டும். மேலும் குழந்தையின் அறையில் மென்மையான, மிதமான மற்றும் துடிப்பான வண்ணங்கள் இருப்பது சிறந்தது. குழந்தையின் அறையில் இருக்கக்கூடிய வண்ணங்களின் மீது சற்று சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். குழந்தை விளையாடும் பொம்மைகள் கூட மிதமான மற்றும் துடிப்பான வண்ணங்களில் இருக்க வேண்டும்.

children's room according to the Vastu system
children’s room according to the Vastu system

மன வளர்ச்சிக்கு ஓவியங்கள் முக்கியம்

அமைதி, ஆன்மீகம் மற்றும் ஊக்கமளிப்பது போன்ற காட்சிகளை சித்தரிக்கும் படங்கள் அல்லது ஓவியங்கள் குழந்தைகளின் அறையில் வைக்கப்பட வேண்டும். இது குழந்தைகளின் மனதை அதற்கேற்றால் போல் வளர்க்க உதவிடும். குறிப்பாக சூரியகாந்தியின் ஓவியங்கள், மன வளர்ச்சிக்கு உதவக்கூடிய பிட்யூட்டரி சுரப்பியை செயல்படுத்த உதவுகின்றன.

children's room according to the Vastu system
children’s room according to the Vastu system

பெற்றோரின் அரவணைப்பு

வாஸ்து சாஸ்திரத்தின் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் கூடுதல் ஆதரவை வழங்க முடியும். ஆனால், பெற்றோர்களிடையே நல்லிணக்கமும் ஒருங்கிணைப்பும் மிகச் சிறந்ததாக இருக்கும்போது மட்டுமே அவற்றை மிகச் சிறப்பாக வழங்கிட முடியும். குழந்தைகள் குறிப்பாக கைக்குழந்தைகளுக்கு அதிக உணர்திறன் மற்றும் ஆற்றலின் பாதிப்பிற்கு மிகவும் ஆளாகக்கூடும். எனவே குழந்தைகளை சுற்றிலும் ஒரு நேர்மறையான சூழலைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியமான ஒன்று.

Latest news

Related news