எனக்கு ஏதாவது நடந்தால் நடிகர் சூர்யா தான் பொறுப்பு - மீரா மிதுன்

நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோரின் ரசிகர்கள் தன்னை மிரட்டுகின்றனர் என்றும், தனக்கு ஏதாவது நேரிட்டால் சூர்யா தான் பொறுப்பு என, நடிகை மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.
 
பாலிவுட் போல தமிழ் சினிமாவிலும் வாரிசு அரசியல் உள்ளது என்று நடிகை மீரா மிதுன் ஏற்கனவே கூறியிருந்தார். சில கும்பல்களின் செயல்களால், பலருக்கு பட வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், சூர்யா, விஜய் ரசிகர்கள், தன்னை தொடர்ந்து, போனில் மிரட்டி வருவதாக அவர் தற்போது குற்றம் சாட்டியுள்ளார். மோசமான செய்திகள், மொபைல் அழைப்புகள், கற்பழிப்பு மற்றும் மரண அச்சுறுத்தல்கள் வருகின்றன.
உங்கள் மனைவியருக்கும், குழந்தைகளுக்கும் இதுபோல் நடந்தால் ஏற்பீர்களா, 80க்கும் மேற்பட்ட எண்களில் இருந்து மிரட்டல்கள் வருகின்றன என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
 

From around the web