சந்திரமுகி 2 பாகம் அறிவிப்பை வெளியிட்ட ராகவா லாரன்ஸ்!!

 

சந்திரமுகி 2ஆம் பாகம் குறித்த அறிவிப்பை சில தினங்களுக்கு முன் வெளியிட்டார் நடிகர் ராகவா லாரன்ஸ். இந்தப் படத்தை பி.வாசு இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது, ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்.

இந்த அறிவிப்பு வெளியானது முதல் படத்தில் ஜோதிகா நடிக்க உள்ளதாகவும், இரண்டு வேடங்களில் அவர் நடிக்கிறார் என்றும் செய்திகள் வெளியானது. ஆனால் இந்த செய்திக்கு நடிகை ஜோதிகா மறுப்பு தெரிவித்திருந்தார்.

இதையடுத்து நடிகை சிம்ரன் படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் பரவியது. இந்த செய்திக்கும் நடிகை சிம்ரன் மறுப்பு தெரிவித்திருந்தார்.

இப்போது நடிகை கியாரா அத்வானி நடிக்க இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது.

இந்நிலையில் சந்திரமுகி 2 படம் குறித்த வதந்திகளுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதுதொடர்பாக நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், "எனது ஊடக நண்பர்களுக்கு வணக்கம், சந்திரமுகி 2 படத்தில் கதாநாயகியாக ஜோதிகா, சிம்ரன் அல்லது கியாரா அத்வானி ஆகியோர் காணப்படலாம் என்று பல செய்திகள் பரவி வருகின்றன. ஆனால் இவை அனைத்தும் போலியான செய்திகள்.

கதைக்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கோவிட் 19 நிலைமை சரியானதும், கதாநாயகி யார் என்று உறுதி செய்யப்படும். பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமா வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற படங்களில் சந்திரமுகி ஒன்றாகும். இதனால் சந்திரமுகி 2 படத்தை உருவாக்குவது இயக்குநர் பி.வாசு மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகியோருக்கு ஒரு சவாலான பணியாக இருக்கும்.

From around the web