சன் டிவிக்கு கோரிக்கை வைத்த விஜய் ரசிகர்கள்!!

ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டி சன் டிவிக்கு விஜய் ரசிகர்கள் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாக்கிய வெற்றி பெற்ற திரைப்படம் பிகில்.

அட்லீ இயக்க ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரூபாய் 300 கோடிக்கும் அதிகமாக வசூலை பெற்றது.

பெரிய திரையில் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை ஆடியது மட்டுமல்லாமல் சின்னத்திரையில் TRPயிலும் சாதனை படைத்திருந்தது.

இன்று மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் இப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

கடந்த வாரம் சன் டிவியில் தெறிபடம் ஒளிபரப்பப்பட்ட இருந்தது. இந்த வாரம் பிகில் படம் ஒளிபரப்பப்பட உள்ளது.

தொடர்ந்து விஜய் படமே ஒளிபரப்பப்பட்டு வருவதால் விஜய் ரசிகர்கள் சன் டிவிக்கு கோரிக்கை ஒன்றை வைத்து ஊர் முழுக்க போஸ்டர் அடித்து உள்ளனர்.

அந்த போஸ்டரில் போனவாரம் தெறி போட்டிங்க இந்த வாரம் பிகில் போடுறீங்க சந்தோஷம். அடுத்த வாரமாவது மற்ற நடிகர் நடித்த படத்தை போடுங்க.

தளபதி சொல்லி இருக்காரு எல்லாரும் நல்லா இருக்கணும். இந்த போஸ்டரை மதுரை மாநகர் வடக்கு மாவட்ட மாணவரணி ஊர் முழுக்க ஒட்டியுள்ளது.

இந்த போஸ்ட்டை பற்றிய புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

From around the web