இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் ஹிப்ஹாப் ஆதியின் ‘அன்பறிவு’ பர்ஸ்ட் லுக் !!

- Advertisement -spot_img

இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருபவர் ஹிப் ஹாப் ஆதி. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான நான் சிரித்தால் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சிறப்பான வசூலை பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் அஸ்வின் ராம் இயக்கத்தில் உருவாகும் அன்பறிவு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் நடிகர் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடிகை காஷ்மீரா நடித்துவருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பொள்ளாச்சியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.

Latest news

Related news