தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கொரோனா உறுதி!

 

தமிழக கவர்னர் மாளிகையில் பணிபுரிந்த சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தியை காலையில் பார்த்தோம்

இந்த நிலையில் சற்று முன்னர் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவர்களின் பரிசோதனை முடிவு வெளிவந்துள்ளது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இருப்பினும் அவருக்கு லேசாக அறிகுறி மட்டுமே இருப்பதாகவும் கொரோனா அறிகுறி இல்லாமல் கொரனோ தோற்று அவருக்கு பரவி உள்ளதாகவும் அதனால் அவர் ஆளுநர் மாளிகையை தனிமைப்படுத்திக் கொள்ள காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது

இதனை அடுத்து ராஜ்பவனில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டு உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தமிழக ஆளுநருக்கு கொரனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத் உள்ளது

From around the web