தமிழகத்தில் இன்று (02-08-2020) மட்டும் 5875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை

 

தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 5,875 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் பற்றிய தரவுகள் அடங்கிய மாநில சுகாதாரத் துறையின் செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 5,875 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2.57 லட்சத்தைத் தாண்டியது.

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 1,086 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்றைய செய்திக் குறிப்பில் மேலும் 98 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 4,132 ஆக உயர்ந்துள்ளது.

From around the web