அந்நியன் படத்தை இந்தி ரீமேக் செய்யும் ஷங்கர்!!

- Advertisement -spot_img

2005-ல் விக்ரம் நடிப்பில் ஷங்கர் இயக்கிய படம் அந்நியன். சுஜாதாவின் எழுத்தில் உருவான இந்தப் படம், சின்னச் சின்ன குற்றங்களே நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக உள்ளது என்ற கருத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருந்தது. தவறு செய்கிறவர்களுக்கு கருட புராணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் தண்டனை என்று புராணத்தையும், ஸ்பிலிட் பர்சனாலிட்டி என்று விஞ்ஞானத்தையும் படம் தேவைக்கேற்ப தொட்டிருந்தது. தமிழைவிட, தெலுங்கில் இப்படம் நல்ல வசூலை பெற்றது.

அந்நியனை இந்தியில் ஷங்கர் ரீமேக் செய்கிறார். இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.இந்தியன் 2 படம் பிரச்னையில் இருப்பதால், ராம் சரண் நடிக்கும் படத்தில் ஷங்கர் கவனம் செலுத்தி வந்தார்.

இப்போது அந்நியன் இந்தி ரீமேக் குறித்து அறிவித்துள்ளார். பென் ஸ்டுடியோஸ் ஜெயந்திலால் இந்த ரீமேக்கை தயாரிக்கிறார். படத்தில் நடிப்பவர்கள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் குறித்த விவரத்தை விரைவில் எதிர்பார்க்கலாம்.

Latest news

Related news