மாரி செல்வராஜை வீட்டிற்கே சென்று பாராட்டிய விக்ரம்!!

- Advertisement -spot_img

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படம் கடந்த 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாளிலிருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை ரசிகர்கள் மட்டும் பார்க்காமல் பல சினிமா பிரபலங்களும் பார்த்த விட்டு தங்களது கருத்துக்களை கூறி வருகின்றார்கள். அந்த வகையில் நடிகர் விக்ரம் படத்தை பார்த்துவிட்டு நேரடியாக இயக்குனர் மாரிசெல்வராஜ் வீட்டிற்கு சென்று பாராட்டியுள்ளார்.

இந்த கர்ணன் திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரித்துள்ளார்.இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். யோகி பாபு, நட்டி நடராஜன், கௌரி கிஷன், லால் போன்றார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Latest news

Related news